தங்கப்பதக்கம் பெற்ற மாணவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, இயற்பியலுக்கான மாநாட்டில் தமிழக மாணவர் ஏ.கே.எம்.மணிவண்ணன் தங்கப் பதக்கம் பெற்றார். நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் அண்ணா அறிவாலயம் வந்தார். அவருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.