Skip to main content

மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்! மக்களே உஷார்!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
aarch


திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் மீன் மார்க்கெட் நகரின் மைய பகுதியான சோலையஹால் தியேட்டர் எதிரே செயல்பட்டு வருகிறது. இப்படி செயல்படக்கூடிய மீன் மார்க்கெட்டுக்கு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, சென்னை உள்பட சில இடங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கழமைகளில் பெரும் அளவில் மீன்கள் வருகிறது.

இப்படி வரக்கூடிய மீன்களை தாடிக்கொம்பு, கோவிலூர், கோபால்பட்டி, கன்னிவாடி, செட்டிநாயக்கன்பட்டி, செம்பட்டி உள்பட சில பகுதிகளில் உள்ள மீன் வியாபாரிகளும் லோக்கலில் உள்ள மீன் வியாபாரிகளும் வந்து வாங்கி சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

 

 

அதுபோல், நகரில் உள்ள மக்களும் இரவு நேரங்களில் இந்த மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்க வரும்போது வியாபாரிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய விலைக்கே பொது மக்களுக்கும் மீன் கடைக்காரர்கள் விற்பனை செய்கிறார்கள். அதிலும் ஐந்து கிலோ அல்லது அதற்கு மேல் வாங்கினால் தான் வியாபாரிகள் விலைக்கு மீன் கொடுக்கிறார்கள் அப்படி இருந்தும் கூட பெரும்பாலான மக்கள் இரவுகளில் வந்து வாங்கி செல்கிறார்கள்.

ஆனால் மீன் மார்க்கெட்டில் உள்ள பல கடைகாரர்களோ ஐஸ் பாக்ஸ் மூலம் இருப்பு வைக்கப்பட்ட பழைய மீன்களை புதிதாக வந்தது போல் தரையில் கொட்டி விட்டு விலை நிர்ணயம் செய்து விடுகிறார்கள். இப்படிபட்ட மீன்களை மீன் வியாபாரிகளே கூட சரி வர வாங்காமல், ரீச்சர் வண்டிகளிலிருந்து வரக் கூடிய மீன்களை தான் பெரும்பாலான வியாபாரிகள் வாங்குகிறார்கள். அப்படிபட்ட மீன்களை கூட மக்கள் வாங்க நினைத்தாலும் பத்துகிலோ, இருபது கிலோ தான் போடுவோம் என கடைக்காரர்கள் சொல்லி விடுகிறார்கள். அதனால் இருக்கிற மீன்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு வரும் போது சுகாதாரம் இல்லாமல் கிழே கொட்டி விற்கப்படும் மீன்களை ஐந்து கிலோவுக்கு குறைவு இல்லாமல் வாங்கி செல்கிறார்கள். இப்படி கெட்டுப் போன பழைய மீன்களாகவே பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
  fish


கடந்த சனிக்கிழமை இரவு என்னுடன் சேர்த்து ஐந்து பெண்கள் மீன் மார்க்கெட்டுக்கு சென்று ஒரு கிலோ 120 வீதம் பாறை மீனை ஆளுக்கு ஐந்து கிலோ வாங்கி வந்து, அறுத்து பார்த்தபோது புது மீனின் தன்மையே இல்லாமல் நொந்து போய் கெட்டுப் போன வாடை அடித்தது. அப்படி இருந்தும் நல்லா கழுவி தான் மீன் குழம்பு வச்சும் கூட குழம்பு சலசலன்னு போச்சு மீனும் நல்லா இல்லாமல் இருந்தது.

அப்படி இருந்தும் சாப்பிட்டதால உடனே வயிற்று போக்கு ஏற்பட்டு குடும்பமே இரண்டு நாள படுத்த படுக்கையா போட்டு விட்டது. இப்படி பழைய கெட்டுப் போன மீனை தான் மார்க்கெட்டில் போட்டு விற்பனை செய்து கொண்டு மக்களை ஏமாற்றி வருவதுடன் மட்டும் மல்லாமல் உடல் நலத்தையும் கெடுத்து வருகிறார்கள் என்றார் மீன் வாங்கி வந்த பெண்ணான அமுதா.
 

anitha
  நகர் நல அலுவலர் அனிதா


ஆனால் மாநகராட்சியில் உள்ள நகர் நல அலுவலர் அனிதா, நகரின் தூய்மைக்காக அதிரடி நடவடிக்கை எடுத்து துப்புரவு தொழிலாளர்கள் மூலம் வீடுகள் தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்க சொல்லி அதை தனி தனியாக பிரித்து உரம் எடுக்கும் முயற்சிலிலும் நகரில் குப்பைகள் இல்லாத அளவிற்கு உடனடியாக சுத்தப்படுத்தி நகரை குப்பை இல்லா நகரமாக வைத்து கொண்டு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயர் எடுத்து வருகிறார். அப்படி இருக்கும் போது மாநகராட்சி கட்டுப்பாட்டில் மீன் கடைகளை வைத்து கொண்டு கெட்டுப் போன மீன்களை விற்கும் மீன் கடைக்காரர்கள் மீது மாநகரத்தின் நகர் நல அலுவலரான அனிதா அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர மக்கள் வலியுறுத்தியும் வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்