மேலூரில் நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாநில துணைத் தலைவர் பி.டி அரசகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மாணவர்களின் கல்வி தரம் உயர்த்துவதற்காகவே நீட் தேர்வுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் தனியார் கல்லூரிகளுக்கு கைக்கூலியாக செயல்படும் விதமாக பொய் பிரச்சாரம் மூலமாக, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவகின்றது என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் , திமுகவிற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது , இந்த பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
- முகில்