நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா? -மாபெரும் கருத்தரங்கம்
நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை சார்பில் “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” எனும் தலைப்பிலான மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கம் செப்டம்பர் 18 திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது.
மருத்துவர் இரவீந்தரநாத், தொழில்நுட்ப அறிவுரைஞர் பொன்ராஜ், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் தாயப்பன், மருத்துவர் இளவஞ்சி, மருத்துவர் ம.மதிவாணன், சமூகச் செயற்பாட்டாளர், நடிகை கஸ்தூரி, ஆசிரியை சபரிமாலா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
முன்னதாக மாணவி அனிதா, இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்வணக்கம் செய்யப்பட்டது.
படங்கள்: அசோக்குமார்