Skip to main content

மாற்று திறனாளிகள் எளிதில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு !

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

இந்திய தேர்தல் ஆணையம் "மாற்று திறனாளி வாக்காளர்கள்" எளிதில் வாக்களிக்கும் வகையில் "Wheel Chair" -ல் அமர்ந்து ஒருவர் உதவியுடன் எளிமையாக சென்று வாக்களிக்கலாம். இதற்காக "Wheel Chair" தேவைப்படுவோர்கள் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்கான மொபைல் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ளது. அந்த மொபைல் செயலி பெயர் : "PWD" ஆகும். 
 

special candidate

இதை கூகுள் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்த பின் சமந்தப்பட்டவரின் வாக்காளர் எண் மற்றும் மாநிலம் , மாவட்டம் ,Polling Both போன்றவை குறிப்பிட்டு "Wheel Chair"- யை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் வாக்களிக்கும் நாளில் வாக்கு மையத்திற்கு சென்று Wheel Chair யை பெற்று உடனடியாக வாக்களிக்க மாற்று திறனாளிகள் அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏற்கெனவே இருந்துள்ள நிலையில் மக்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லை. இதனால் தான் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களை செய்து வருகிறது.
 

பி .சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்