Skip to main content

குளமங்கலம் பிரமாண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் சிறப்பு வழிபாடு: (படங்கள்)

Published on 16/09/2017 | Edited on 16/09/2017
குளமங்கலம் பிரமாண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் சிறப்பு வழிபாடு நடந்தது





குளமங்கலம் தெற்கு பிரமாண்ட விஸ்வப ஆஞ்சநேயருக்கு பால், பழம், மலர்களால் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

பிரமாண்ட ஆஞ்சநேயர் :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தில் எழுந்தருளியுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலயம் முன்பு 34 அடி உயரத்தில் கருங்கல் ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. தினசரி வழிபாடுகளும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

அன்னதானம் :
ஆவணி கடைசி சனிக்கிழமை மற்றும் வருடாபிஷேகத்தை ஆஞ்சநேயருக்கு பால், பழம், தேன், மலர்கள் என்று பல்வேறு அபிஷேகங்களுடன் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு அதே உயரத்தில் மலர் மாலைகள், பழங்களால் கட்டப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில் நோட்டு போன்ற பொருட்களும் பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டதுடன் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை கருப்பையா மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

-பகத்சிங்

சார்ந்த செய்திகள்