Published on 01/10/2021 | Edited on 01/10/2021
தெற்கு ரயில்வே துறை சார்பில், திருச்சி குற்ற தடுப்பு மற்றும் கண்டறிதல் குழு புதுச்சேரி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் பார்சல்கள் கொண்டுவரப்பட்ட பெட்டியிலிருந்து 12 சாக்குப் பைகளை சிறப்புக் குழு சோதனை செய்தது. அந்த சாக்குப் பைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகள் இருப்பது கண்டறியப்பட்டு, 12 மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 12 மூட்டைகளில் 560 கிலோ தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களைக் கொண்டுவந்த நபர்களை ரயில்வே சிறப்பு குழு கைது செய்ததோடு, அதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்றும் அறிவித்துள்ளனர்.