Skip to main content

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களை தாக்கிய வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரண்

Published on 06/08/2017 | Edited on 06/08/2017
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களை தாக்கிய வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரண்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள ஆட்டுக்காரனூரில் நடைபெற்ற திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 29-ஆம் தேதி  நள்ளிரவு  பாதுகாப்பு பணிக்கு சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் அசோகன் (வயது-52), கலைஞர் (வயது-56), ஆகிய இருவரையும் ஆத்துக்காரனூர் பிரிவு சாலை அருகில் வழி மரித்த அடையாளம் தெரியாத ஆட்கள் மூவர் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

மண்டை உடைந்து படுகாயமடைந்த காவல்துறையினர் இருவரும் அவ்வழியாக வந்த பொதுமக்களால் மீட்கப்பட்டு  சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் அந்த ஆட்களால் தவறவிட்ட மொபைல் போனை கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்து.

இதையடுத்து, நாமக்கல் மாவட்ட குற்றபிரிவு போலீசார் மூலம், குமாரபாளையத்தில் உள்ள மூவரின் வீடுகளிலும் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று காலை ஈரோடு இரண்டாவது குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில், குமாரபாளையத்தைச் சேர்ந்த சங்கர் (வயது-22), பிரவீன் (வயது-23), ஆகியோர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களை  தாக்கிய வழக்கில் சரண் அடைந்தனர். அடுத்த ஒரிரு நாளில்  ஓமலூர் போலீசார் சரணடைந்த இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்