Skip to main content

சாலையில் வருவோர் போவோருக்கு அரிவாள் வெட்டு;சென்னையில் கஞ்சாபோதையில் ரவுடிகும்பல் கண்மூடித்தனமாக கொடூரத்தாக்குதல்

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

சென்னை செம்மஞ்சேரியில் கஞ்சாப்போதையில் சாலையில் நடந்து செல்பவர்கள் வருபவர்கள் என கண்ணில்பட்டவர்கள் மீது கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலால் பெரும் பரபரப்பு நிலவியது.

 

attack

 

செம்மஞ்சேரி சுனாமி நகரை சேர்ந்தவர்களுக்கும் அருகே உள்ள பெரும்பாக்கம் குடிசைமாற்றுவாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலருக்கும் அவ்வப்போது மோதல்கள் நிலவிவந்துள்ள நிலையில் தற்போது நேற்று இரவு பெரும்பாக்கத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் செம்மஞ்சேரி பகுதிக்கு மது மற்றும் கஞ்சா போதையில் அந்த பகுதிக்கு வந்தனர்.
 

attack

 

 

attack

 

attack

 

வந்தவர்கள் ரோட்டில் வருபவர்கள் அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கினர் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பதுங்கி கொண்ட போதும் அந்த கும்பல் பொது சொத்துக்கள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் மின் கம்பங்கள், வாகனங்கள் உடைக்கப்பட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அரிவாளால் தாக்கியதில் ஜெயசீலன் மற்றும் ஐயப்பன் என இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் போலிஸார் கைது செய்தாலும் 15 ரீமான்ட்டில் வந்துவிடுவோம் என்ன செய்வீர்கள் என ரவுடிகள் மிரட்டல் விட்டுவிட்டு செல்கின்றனர். இப்படி அடிக்கடி நடக்கிறது. எப்போதுதான் இதெற்கெல்லாம் தீர்வு வருமோ என அச்சம் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்