Skip to main content

'பினாமி' பெயரில் சிவசங்கரன் ரூ.300 கோடி முதலீடா? அமலாக்கத் துறை விசாரணை!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

Is Sivasankaran investing Rs 300 crore in the name of Benami? Enforcement Department Investigation


ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தூதரகத்தின் டிப்ளோமேட் பேக் மூலம் கேரளாவுக்குத் தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் கைது செய்யபட்ட ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரம் அட்டன்குளம் கரை மகளிர் சிறையில் உள்ளார். ஸ்வப்னா சுரேஷின் தங்கக் கடத்தலுக்கு முதுகெலும்பாக இருந்த முதன்மைச் செயலாளரும் தகவல் தொழிட்நுட்பச் செயலாளருமான சிவசங்கரன் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யபட்டு (நீதிமன்ற அனுமதியுடன்) அவர்களின் கஸ்டடியில் உள்ளார்.


இந்தநிலையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், சிவசங்கரன் 300 கோடி ரூபாய்க்கு மேல் 'பினாமி' பெயரில் முதலீடு செய்திருப்பதை ஒப்புக்கொண்டதாக, அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


அதில், கேரள மின்சாரத்துறை தலைவராக இருக்கும்போது காற்றாலைகள் மூலம் மின்சாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெறபட்டது. அதில், 'ஜொ்மனி ஆல்லைட் சைன்' நிறுவனத்துடன் தொடா்பை ஏற்படுத்திக் கொண்டு, அந்த நிறுவனம் கன்னியாகுமரி அருகே ஆரல்வாய்மொழி, நெல்லை மாவட்டம் பழவூா், பணகுடி ஆகிய இடங்களில் காற்றாலைகளில் முதலீடு செய்துள்ளார். மேலும் அந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் இருக்கும் 4 நாடுகளில் ஹோட்டல், சுற்றுலா நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார்.


அதேபோல், கேரளாவில் சுற்றுலா மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு கன்.ஃபா்மடு ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கரனால் இந்தளவு கோடிகளை முதலீடு செய்ய முடிந்தது என்றால் அவா் துறை ரீதியாக எவ்வளவு ஊழல் செய்திருப்பார் என்ற கேள்வி அமலாக்கத் துறையில் எழுந்துள்ளது. அந்த வகையில் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதில் முதல் கட்டமாக அமலாக்கத் துறையினா் குமரி, நெல்லை மாவட்டங்களில் காற்றாலையில் முதலீடு செய்திருப்பது தொடா்பாக விசாரணை நடத்த 4 -ஆம் தேதி வரவுள்ளனா். அதனைத் தொடா்ந்து கேரளா மற்றும் வெளிநாடுகளில் செய்திருக்கும் முதலீடு சம்மந்தமாகவும் விசாரணை நடத்த உள்ளனா். இதற்கிடையில் சிவசங்கரனின் ஒரே மகனையும், அவரது மனைவி டாக்டா் கீதாவையும் விசாரிக்க உள்ளனா். இந்த நிலையில் சிவசங்கரனின் முதலீடு நிதி குறித்து கேரள தலைமைச் செயலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனா்.

 

 

 

சார்ந்த செய்திகள்