
நிறுத்தி வைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் இன்று (11/12/2020) நடக்கிறது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (11/12/2020) காலை 10.00 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் செந்தில், அ.தி.மு.க. சார்பில் பொன்மணி பாஸ்கர் போட்டியிடுகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 16 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. இந்த 16 வார்டுகளில் அ.தி.மு.க.- தி.மு.க. கூட்டணி தலா 8 வார்டில் சமமாக வெற்றி பெற்றதால் இன்று தேர்தல் நடக்கிறது.
ஜனவரி 11, 30, மார்ச் 4, டிசம்பர் 4 என ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் உடனே அறிவிக்கப்பட உள்ளது.