நாடாளுமன்ற தேர்தலின்போது சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கின் குறுக்கு விசாரணைக்கு ஆஜராக பிப்ரவரி 7-ஆம் தேதி வரை அவருக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடந்த 2009- ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை விட 3354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டிருந்ததால் குறுக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குறுக்கு விசாரணைக்கு ஆஜராக மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி குறுக்கு விசாரணைக்கு ஆஜராக பிப்ரவரி 7- ஆம் தேதி வரை சிதம்பரத்திற்கு அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்தார்.