Skip to main content

''சார் தான் டீ வாங்கிட்டு வர சொன்னாரு'' - பள்ளிக்கல்வித்துறை வரை சென்ற புகார்

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

"Sir, he asked me to buy tea" - the complaint went to the school education department

 

பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தனிப்பட்ட வேலைகளைக் கொடுத்து கட்டளையிடுவது, பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்யப் பணிப்பது தொடர்பான செய்திகள் அவ்வப்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும். இது தொடர்பாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்துள்ளன.

 

இந்த நிலையில், பள்ளி மாணவர்களை தேநீர் வாங்கி வரச் சொல்லி ஆசிரியர் பணிக்க, மாணவர்களும் தேநீர் வாங்கி வந்துள்ளனர். அப்பொழுது பொதுமக்களில் ஒருவர் மாணவர்களிடம் விசாரித்து இது தொடர்பாக கேள்வி எழுப்பும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ளது ஆண்டியூர் ஊராட்சி. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கட்டடப் பணி நடைபெற்று வருகிறது. இதில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு தேநீர் கொடுக்க ஆசிரியர்கள் மாணவர்களை தேநீர் வாங்க அனுப்பி உள்ளனர். டீக்கடையில் இருந்த மக்கள் பார்சல் வாங்கிச் சென்ற மாணவர்களிடம் கேள்வி எழுப்ப, இளங்கோ சார்தான் வாங்கி வரச் சொன்னார் எனப் பதிலளித்துள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்