முருகன் உடல்நிலை-
அறிக்கை அளிக்க சிறைத்துறைக்கு உத்தரவு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் இன்று 12வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், முருகன் உறவினர் தேன்மொழி என்பவர் முருகனை நேரில் சந்திக்க பலமுறை மனு அளித்தும் சிறைத்துறையினர் அனுமதிக்கவில்லை என்று தொடர்ந்த வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், முருகன் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.