Skip to main content

''இது மாபெரும் பிரச்சனையாக மாறி விடக்கூடாது... உங்களை நம்பி மாவட்டங்களை கொடுத்துள்ளேன்''-மு.க.ஸ்டாலின் பேச்சு!  

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

"This should not become a big problem... I have trusted you and given the districts" - M. K. Stalin's speech!

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு மாநாடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இந்த மாநாட்டில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை எஸ்பிக்கள், தமிழக காவல்துறை டிஜிபி, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''போதைப் பொருள் தடுப்பிற்காக கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம் என்று சொன்னால், இது வருங்காலத்தில் மாபெரும் பிரச்சனையாக மாறிவிடக்கூடாது என்ற காரணத்தால் தான். இந்த அரங்கத்தில் இருக்கும் அனைவரும் நமக்கு முன்னால் இருக்க கூடிய அழிவுப் பாதையான போதை பாதையை நமது முழு ஆற்றலையும் பயன்படுத்தித் தடுத்தாக வேண்டும். அதற்கான உறுதியை எடுத்தாக வேண்டும். போதைப்பொருள் விற்பனையைத் தடுத்தாக வேண்டும், பயன்பாட்டைத் தடுத்தாக வேண்டும். பயன்படுத்துபவர்களை அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டும். இந்த உறுதிமொழியை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளேன்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்