Skip to main content

மூன்று வயது சிறுமியின் உயிரைப் பறித்த ராங்-கால்: கோவையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

 

கோவையில் மூன்று வயது சிறுமியை கொலை செய்து முட்புதரில் வீசியெறிந்த நபரை போலீசார் தீவீரமாக தேடிவருகின்றனர்.

 

அண்மையில் கோவையில சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த கொலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவர கோவையில் பொள்ளாச்சி சம்பவத்தை அடுத்து மேலும் பரபரப்பை கிளப்பியிருந்தது.

 

police

 

இந்நிலையில் இதைப்போன்றே இன்னொரு சம்பவம் அதே கோவை மாவட்டத்தில் நடந்திருக்கிறது. கோவை காரமடை வெளியங்காட்டை சேர்ந்த ரூபிணிக்கு ராங் கால் மூலம் தமிழ் செல்வன் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். ராங் காலில் பேசிவந்த இருவரின் உறவு தவறான உறவாக மாற, ரூபிணிக்கும் அவரது கணவர் பால்ராஜுக்கும் இதுதொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.  இதனால் தனது மூன்று வயது சிறுமி தேவிஸ்ரீயை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் ரூபிணி. 

 

 

உறவினர் வீட்டில் வசித்து வந்த ரூபிணியை தன்னுடன் வரும்படி கூறியுள்ளார் ராங் கால் நபர் தமிழ்செல்வன். அந்த அழைப்பை ஏற்று அவருடன் சென்றுள்ளார் ரூபிணி. ஆனால் ரூபிணியுடன் அவரது மூன்று வயது மகள் தேவி ஸ்ரீ இருப்பதை தமிழ்செல்வன் விரும்பவில்லை. பாட்டி வீட்டில் தேவிஸ்ரீயை கொண்டுபோய் விட்டுட்டு வருவதாக அழைத்து சென்ற சில மணி நேரம் கழித்து தனியே வந்த தமிழ்செல்வனிடம் குழந்தையை அழைத்து வந்து தன்னிடம் விடும்படி கூறியிருக்கிறார் ரூபிணி.

 

police

 

police

 

ஆனால் குழந்தையை அழைத்து வருவதாக கூறி சென்ற தமிழ்செல்வன் திரும்ப வரவேயில்லை. இறுதியில் தாய் ரூபிணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் தமிழ்செல்வனையும்,தேவிஸ்ரீயையும் தேடிவந்தனர். தேடுதலின் பொழுது தேவிஸ்ரீ  கரட்டிமேடு என்ற இடத்தில் முட்புதரில் கொடூரத்தனமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை அறிந்த போலீசார் குழந்தையின் உடலை கண்டெடுத்தனர். மீட்கப்பட்ட சிறுமியின் உடலில் அடித்து கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன.

 

police

 

பாட்டி வீட்டில் விடுவதாக அழைத்து சென்ற தமிழ் செல்வன் சிறுமியை கொலை செய்து முட்புதரில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக இருக்கும் தமிழ்ச்செல்வனை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  மீண்டும் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்