Skip to main content

பட்டதாரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை;உரிய சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும் கைது செய்ய மறுக்கும் போலீசார்; உறவினர்கள் போராட்டம்!!

Published on 20/10/2018 | Edited on 20/10/2018

கன்னியாகுமரியில் பட்டதாரி இளம்பெண், பழுதாகிய தொலைக்காட்சியை சரி செய்ய வந்த பக்கத்து வீட்டு நபரால் பாலியல் கொடுமை செய்யப்பட்டு பதிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

kanniyakumari

 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரை சேர்ந்த 22 வயதான எம்.ஏ பட்டதாரி மாணவி பிபிஷா. இவர் கடந்த 11-ஆம் தேதி வீட்டில் தொலைக்காட்சி பழுதாகிவிட்டதாக அதை சரி செய்ய பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் இரு குழந்தைகளுக்கு தந்தையான ராஜேஷ் என்பவரை அழைத்துள்ளார். தொலைக்காட்சியை பழுதுபார்க்க ஆளை கூட்டிவருவதாக கூறிய ராஜேஷ் சிறிதுநேரம் கழித்து சரி செய்ய யாரும் கிடைக்கவில்லை நானே தொலைக்காட்சியை பழுதுபார்க்கிறேன் என கூறி வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது இளம்பெண் பிபிஷாவிடம் ராஜேஷ் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

 

kanniyakumari

 

அதன்பின் வீட்டிற்கு சென்ற ராஜேஷ் திரும்பவும் பிபிஷா வீட்டின் வாயிலுக்கு சென்று அவரை வெளியே அழைத்து கொலைமிரட்டல் விட்டு சென்றுள்ளார். அதனை அடுத்து சில மணி நேரத்திலேயே இளம்பெண் பிபிஷா வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். பின்னர் அருகிலிருந்த பொதுமக்கள் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து அவரை மீட்டனர். ஆனால் 80 சதவிகித தீக்காயத்துடன் மீட்கப்பட்ட பிபிஷா சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். 

 

kanniyakumari

 

இந்த சமபவத்தில் ராஜேஷ் வீட்டுக்கு வந்தது, பாலியல் தொல்லை கொடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் மீட்டது என முழு சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களாக கையிலிருந்தும் போலீசார் ராஜேஷை கைது செய்யாமல் இருப்பதை கண்டித்து பிபிஷாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமபந்தப்பட்ட அதிகாரிகளும், போலீசாரும் கூறியதன்பின் பிபிஷா உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

 

kanniyakumari

 

வீடியோ ஆதாரங்கள் இருந்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காத இந்த பாலியல் குற்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சார்ந்த செய்திகள்