Published on 19/11/2018 | Edited on 19/11/2018
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தற்போது பத்திரிகையாளார்களை சந்தித்தார். அப்போது அவர்,
தென்கிழக்கில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கில் நிலைகொண்டுள்ளது. நாகை. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் உள்மாவட்டங்களிலும் மழைபெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருக்கிறது. மீனவர்கள் 20 மற்றும் 21ம் தேதிகளில் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 7 புயல்கள் சென்னையை என சமூக வலைதளங்களில் பரவுகிறது என பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு அதற்கு வாய்ப்பில்லை, அவையனைத்தும் பொய்யான தகவல்கள் என பதிலளித்துள்ளார்.