கரூரில் நடக்கும் ஒவ்வொரு அரசியலும் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் சம்பவமாக மாறி வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த செந்தில் பாலாஜி, அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனுடன் கருத்து வேறுபாடு இருந்த நேரத்தில் தி.மு.க. பக்கம் சாய்ந்தார். தி.மு.க. வந்தவுடன் தொடர்ந்து தன் செல்வாக்கை கரூரில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தி பல ஆயிரம் பேரை திமுகவில் இணைய வைத்தார். சிறப்பான பூத் கமிட்டி நடத்தி ஸ்டாலின் நற்சான்றிதழை பெற்றதன் பரிசாக கரூர் மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இதற்கு இடையில் எடப்பாடி தொகுதியில் அதிரடியாக உள்ளே நுழைந்து ஈரோடு, அந்தியூர், என ஒவ்வொரு ஊராக ஊராட்சி கூட்டம் நடத்தி பிரமாதப்படுத்தினார்.
தொடர்ந்து செந்தில்பாலாஜியின் அதிரடி அரசியலில் கை ஓங்கி கொண்டிருந்த நேரத்தில் அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜியின் உடன் இருந்த கொங்குமணி மீது கஞ்சா கடத்தல் வழக்கு பதியப்பட்டு தலைமறைவாக இருந்த நேரத்தில் இந்த வழக்கில் செந்தில்பாலாஜியை சிக்க வைக்க நேரம் பார்த்து கொண்டிருந்த நேரத்தில் அதிரடியாக அமமுக மாவட்ட பொருளாளர் வி.ஜி.எஸ்.குமாரை திமுகவுக்கு அழைத்து வந்துவிட்டார். சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் குமார் திமுகவில் இணைந்தார். தற்போது அ.தி.மு.க.வினர் மேலும் குழம்பி போயிருக்கின்றனர்.