சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.
இந்நிலையில் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார். படுத்த படுக்கையாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது. செந்தில் பாலாஜி ஆஜரானதைத் தொடர்ந்து அவருக்கான நீதிமன்ற காவலை ஆகஸ்ட் ஏழாம் தேதி வரை நீட்டித்து சென்னை முதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் படுத்த படுக்கையாக அவர் ஆஜர்படுத்தப்பட்டதாக நீதிபதியிடம் சிறைக் காவலர் விளக்கம் அளித்துள்ளார்.