Skip to main content

பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் செய்தவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் செய்தவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்துள்ள டேனிஷ்பேட்டை ஊராட்சிக் உட்பட்ட பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி, கூலி நெசவுத் தொழிலாளியான இவர் கடந்த 15.4.2010-அன்று உடல் நலக்குறைவு காரணமாக டேனிஸ்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தொடர்ந்து சிகிச்சை கொடுத்தும் பலனின்றி போனதால், ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். பழனிசாமி அங்கு சிகிச்சை கொடுக்கப்பட்ட பின்னார் உடல்நலம் சரியானது. அங்கிருந்த மருத்துவர்கள் ஏற்கனவே சிகிச்சை கொடுக்கப்பட்டத்தில் குளறுபடி நடந்துள்ளதாக கூறியுள்ளனர்.

டேனிஷ்பேட்டையில் சிகிச்சை அளித்தவர் போலி டாக்டர் என சந்தேகம் அடைந்த பழனிசாமி, இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கிளினிக்கில் சோதனை நடத்தி விசாரித்தனர்.

அங்கு மருத்துவம் பார்த்து வந்த காடையாம்பட்டி அருகிலுள்ள கோட்டேரிக்கரை என்ற பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது-47) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார் என தெரியவந்தது.

இதையடுத்து போலி டாக்டர் முருகேசனை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை ஓமலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஆறு ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. போலி மருத்துவர் என குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நடுவர் ரமேஷ் தீர்ப்பு கூறினார்.

சார்ந்த செய்திகள்