Skip to main content

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் ஏன்?  அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

vinayagar chaturthi

 

கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மே மாதம்முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. கரோனா பரவலின் தாக்கத்தைப் பொறுத்து அவ்வப்போது தமிழ்நாடு அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்துவருகிறது. தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு இறுதியில் கடலிலோ ஆற்றிலோ கரைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

 

தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி இன்றைய சட்டப்பேரவையில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். எம்.ஆர். காந்தியின் கேள்விக்குப் பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய உள்துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் பேரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்