Skip to main content

பாடியில் ரூ.10லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Published on 25/09/2017 | Edited on 25/09/2017
பாடியில் ரூ.10லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!



சென்னையில் பாடி குமரன் நகரில் உள்ள ஒரு குடோனில் 70 மூட்டைகளில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், பான்மசாலா, புகையிலை, போன்ற போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுடலைமுத்து என்பவருக்கு சொந்தமான லேத் பட்டரையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக டி3 கொரட்டூர்  காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு தகவல் வந்ததின் பேரில் அங்கு சென்ற ராஜ்குமார், அப்போது அந்த குடோனில்
பான் மசாலாக்களை பேக்கிங் செய்து கொண்டிருந்த கர்ணன் என்பவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து உரிமையாளர் சுடலைமுத்துவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர் பிடிப்பட்டால் இதைபோல் அவருக்கு சொந்தமாக இன்னும் அதிகமான குடோன் உள்ளது என்கிறது காவல்துறை. மேலும் அந்த குடோனில் உணவுப் பொருட்களில் பான்மசாலா கலந்து மார்கெட் செய்யப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

- அருண்பாண்டியன்
படங்கள் - அசோக்குமார்

சார்ந்த செய்திகள்