வேலூர் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாணியம்பாடியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர்,
மத்திய அரசு தேசியே புலனாய்வு முகமை கொண்டுவந்த போது இந்திய பாராளுமன்றத்தில் ஒரேஒரு குரல் அசாதுத்தீன் உவைசி மட்டும்தான் எதிர்த்து குரல் கொடுத்தார். மத்த எல்லோரும் ஆதரிச்சு ஓட்டு போட்டுட்டு வந்தவங்கதான். அதேமாதிரிதான் முத்தலாக் சட்டத்தையும் ஆதரிச்சு இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்திருக்காங்க. இந்த சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலன்னு சொல்லிக்கற அதிமுகவும் ஆதரிச்சியிருக்கு. அந்த கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் முத்தலாக் மசோதாவை வரவேற்றுள்ளார்.
தமிழகத்தில் பிஜேபி ஒரு சீட்டும் இல்லாமல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கின்றது. பிஜேபிக்கு இசுலாமிய பெண்கள் மீது ஏன் இவ்வளவு அக்கறை. கடந்த காலங்களில் நரேந்திர மோடி அரசு பல்லாயிரக்கணக்கான இசுலாமிய பெண்களை விதவை ஆக்கியது. அவசர அவசரமாக முத்தலாக் மசோதாவுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்தீர்கள். இசுலாமிய பெண்களுக்கு பாதுகாப்பு என்றால் நபிகள் நாயகம் சல்லம் தந்துள்ள ஷரியத் சட்டம்தான் சிறந்த பாதுகாப்பு.
இந்தநாட்டில் இந்திக்காரனிடம் நாம் அடிமையாக இருப்பது விட ஆங்கிலயர்களிடம் அடிமையாக இருந்திருக்கலாம். முகலாய மன்னர்கள் ஆட்சி செய்தபோது யாரும் எங்களை பார்சி மொழியையும், ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது ஆங்கிலம் படித்தாகனும் என்று கட்டாயப்படத்தவில்லை. ஆனால் இவர்கள் நம் மீது இந்தியை திணிக்கப் பார்கின்றனர்.
இன்றைக்கு பிறக்கின்ற குழந்தைக்கு 25 ஆண்டுகள் கழித்து இந்த பூமியில் வாழ இடம் இருக்காது. இல்லையென்றால் இந்த பூமி அவர்கள் வாழ்கின்ற இடமாக இருக்காது. இதில் இரண்டில் ஒன்று நடக்கும். தமிழகத்தை ஆளும் அடிமை எடப்பாடி தலைமையில் உள்ள இந்த ஆட்சியாளர்களால் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியவில்லை. வேளாண்மை நசிந்து நாசமாகிவிட்டது. வேளாண் குடிமக்கள் எல்லாம் செத்துக்கொண்டு இருகின்றனர். தடுக்க முடியவில்லை. கல்வியை தனியார் மயமாக்கி மிகப்பெரிய வர்த்தக சந்தையாக மாற்றிவிட்டனர். மருத்துவம் மிகப்பெரிய விற்பனை பண்டமாக மாறியுள்ளது, இவைகள் தடுக்க முடியாத இடத்தில் உள்ளது.
விரைவாக சென்னைக்கு செல்ல 8 வழிச்சாலை போடுகின்றனர். கார் ஓட்டுபவர்களுக்கு கவலைப்படுகின்றார் இந்த ஆட்சியாளர்கள். காரில் உள்ளவர்களுக்கு நீறும், சோறும் கொடுக்கின்ற விவசாயி பற்றி ஏன் இந்த அரசாங்கம் கவலைப்படுவதில்லை. உலகத்திற்கு முன் மாதிரியாக வாழ்ந்த இனம் தமிழர்களாகிய நாம்தான். எல்லாவற்றையும் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தோம். உலகத்திற்கு அறிவை கடன் கொடுத்த இனம் தமிழ் இனம்தான் என்றார்.
வாக்காளர்கள் அரசியல்வாதிகளிடம் 500, 1000ன்னு வாங்கிக்கிட்டு ஓட்டை விற்கிறார்கள் நம் மக்கள். நம்மிடம் நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கி நாட்டை விற்கிறார்கள். கேரளாவில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் இல்லை. அவர்கள் வாங்குவதும் இல்லை. மாற்றம் வேண்டும்மென்றால் உங்களை நம்பி போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமிக்கு வாக்களியுங்கள் என்றார்.