Skip to main content

பள்ளி விபத்து சம்பவம்... தமிழ்நாடு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

School incident ... Tamil Nadu Chief Minister announces relief!

 

நெல்லையில் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

நெல்லையில் பொருட்காட்சித் திடல் அருகே எஸ்.என். ஹைரோடு பகுதியில் உள்ள டவுன் சாஃப்டர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுவர் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இந்த விபத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விவரங்களைப் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சுதீஸ் - 6ஆம் வகுப்பு 'சி' பிரிவு, விஷ்வரஞ்சன் - 8ஆம் வகுப்பு 'ஏ' பிரிவு, அன்பழகன் - 9ஆம் வகுப்பு 'பி' பிரிவு என மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

School incident ... Tamil Nadu Chief Minister announces relief!

 

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நிவாரணமும் அறிவித்துள்ளார். “இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கல்” என தெரிவித்துள்ள ஸ்டாலின், இந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்