Skip to main content

எஸ்.பி.பி  மறைவு... முதல்வருக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கை!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

SBP's demise ... DMK leader Stalin's main demand

 

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல், நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளன நிலையில், அவரது உடல் தற்பொழுது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கலைத்துறையில் அவருடன் பணியாற்றியவர்கள், பயணித்தவர்கள் என அனைவரும் தங்களது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது அரசிற்கும், முதல்வருக்கும் கோரிக்கை வைத்து ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ''தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக, அரை நூற்றாண்டுக் காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு 'அரசு மரியாதை'யுடன் நடைபெற தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்!'' எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்