கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளிலும் இந்த உள் ஒதுக்கீடு தொடர்வதற்கான நிலை வகுத்துள்ள உயர்நீதிமன்றம், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இதனை மீண்டும் மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசு தரப்பு வழக்கறிஞர் மூலமாக தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டு பின்னர் இதில் தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.