Skip to main content

சசிகுமார் கொலையில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி ஆணையரிடம் மனு

Published on 28/10/2017 | Edited on 28/10/2017

சசிகுமார் கொலையில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது
 நடவடிக்கை கோரி ஆணையரிடம் மனு

இந்து முன்னனி பிரமுகர் சசி்குமார் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது சகோதரர் துணை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.

இந்து முன்னனியின் மாவட்ட செய்தித்தொடர்பாளர் சசிகுமார்,  கடந்த 22.09.2016 அன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு மூன்று பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக சதாம் உசேன், அபுதாகீர்,சுபேர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அபுதாகீர் நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார். இந்நிலையில் வினோத் எனபவர் சசிகுமார் கொலை தொடர்பாக தவறான கருத்துக்களை சமூக வலை தளங்களில் பரப்பி வருவதாக கூறி அவரது சகோதரர் மற்றும் இந்து முன்னனியினர் துணை ஆணையாளர் லட்சுமியை சந்தித்து மனு அளித்தனர்.

சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 

இது குறித்து இந்து முன்னனி மாநிலகுழு உறுப்பினர் குணா, சசிகுமார் கவுண்டர் இனப்பெண் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பிள்ளையார் சதூர்த்தியின் விழாவில் வசூலிக்கப்பட்ட பணத்தில் பங்கு போடுவதில் பிரச்சனை எனவும், சசிகுமார் மனைவிக்கும் தம்பிக்கும் இரகசிய உறவு மற்றும் இந்து மக்கள் கட்சியினர் முன்விரோதமாக கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்ப பட்டு வருவதற்கு காரணமான வினோத் என்பவரை கைது செய்யக்கோரி மனு அளித்ததாக குறிப்பிட்டார்.


- அருள்

சார்ந்த செய்திகள்