Skip to main content

சரித்திரச் சம்பவம்... கொடியேற்றத்துடன் தொடக்கம்...

Published on 04/08/2019 | Edited on 04/08/2019

சைவம் பெரிதா?. வைணவம் பெரிதா? என்கிற இருதரப்பு மோதல்கள் ஆதிகாலத்தில் நடந்ததுண்டு. இந்த மோதலைத் தடுத்து ஒற்றுமை ஏற்படுத்துகிற வகையில் தன் உடம்பில் ஒரு பாதியை சிவனாகவும் மற்றொரு பாதியை அரியாகவும் ஒரு சேரத் தோன்றும் தோற்றத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளித்த ஆதிக்கடவுள் சிவபெருமான், இருவரும் ஒன்றே, இரண்டும் சமமே என அருள் பாலித்து அமைதியை ஏற்படுத்தினார்.

 

sankarankovil temple function

 

 

இந்த அரிய காட்சியை தான் காணும் பாக்யம் வேண்டும் ஒன்று, உமையவள் பார்வதி தேவியார் சர்வேஸ்வரனிடம் வேண்டி நின்றார். அவரின் ஆக்ஞைப்படி பார்வதி தேவியான ஸ்ரீகோமதியம்பிகையும் தவமிருக்க அதற்கு மனமிறங்கிய சிவபெருமான், பூலோகத்தின் புன்னைவனத்தில் அம்பிகைக்குக் காட்சியளித்தார் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பூமியில் அந்த அரிய காட்சி நடந்தது. அதுவும் ஆடிமாதம் நடந்தது என்பதால் ஆடித்தபசு என்று வரலாறானது. சங்கரன்கோவிலில் ஆதிக் கடவுள் ஸ்ரீசங்கரநாராயணர், கோமதியம்பிகை பெயரால் அமையப் பெற்ற மிகப் பெரிய ஆலயத்தில் 13.08.2019 அன்று நடக்கவிருக்கிற அடித்தபசு காட்சி விழாவின் பொருட்டு 10 நாட்கள் நடக்கும் திருவிழா நேற்று ஆலயத்தில் தீபாராதனையுடன் பக்தர்கள் கூட்டம் திரள கொடியேற்றம் நடந்தேறியது.

 

 

சார்ந்த செய்திகள்