சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தற்பொழுது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் ஓய்வுபெற இருக்கும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த 'சஞ்சீவ் பானர்ஜி' பெயரை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சஞ்சீவ் பானர்ஜி கொல்கத்தாவில் பிறந்து, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸில் பொருளாதாரம் படித்தவர். அதன்பிறகு, சட்டம் பயின்று கொல்கத்தா, ஒடிசா, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நீதிமன்றங்களில் வழக்கறிஞராக இருந்தார்.
இந்நிலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூன் மாதம், அவர் பிறந்த கொல்கத்தாவிலேயே, உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், பின்னர் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டிருத்தனார். இந்நிலையில், தற்பொழுது அவரது பெயர் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கான பெயரில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.