புதுச்சேரியில் ஒரே அணிதான்:
அ.தி.மு.க. எம்.எல்.ஏ., பேட்டி
புதுச்சேரி சின்னவீராம்பட்டிணம் ரெசார்டில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை புதுச்சேரி முதலியார்பேட்டை எம்எல்ஏ பாஸ்கர் வந்து பார்த்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "எங்களது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க வந்தேன் என்றார்.
"தாங்கள் கடந்த முறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தபோது வரவேற்றீர்கள். நீங்கள் எந்த அணி?" என்ற கேள்விக்கு, "நான் டி.டி.வி. தினகரன் அணி தான் என்றும், நாங்கள் நான்கு பேரும் ஒற்றுமையாகத்தான் இருப்போம். அவர்கள் எப்போது அறிவிப்பார்கள் என்று தெரியாது. ஆனால் விரைவில் அறிவிப்பார்கள்" என்று தெரிவித்தார்.
-சுந்தரபாண்டியன்