Skip to main content

ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன்

Published on 22/10/2017 | Edited on 22/10/2017
ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன்

அதிமுக தினகரன் அணி மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 

கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ்சுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதரவாக வாக்களித்த எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். வழக்கில் வெற்றி பெற்று மீண்டும் ஒரு மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறினார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஆளுங்கட்சியின் கொறடாவை மீறி வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், சாதகமாக வாக்களித்த எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இத்தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக போனேன். இப்போது சாதாரணமானவனாக வந்துள்ளேன். இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் எம்.எல்.ஏ.வாக வருவேன் என இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்