Published on 03/11/2019 | Edited on 03/11/2019
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறப்பும் வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 9,000 கனஅடியாக அதிகரிப்பு. மேலும் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் இருக்கிறது.