Skip to main content

சேலம் - சென்னை இடையே மீண்டும் விமானப் போக்குவரத்து!

Published on 26/05/2020 | Edited on 26/05/2020

 

Air transport


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.


நோய்ப்பரவல் அபாயம் காரணமாக பேருந்து, ரயில், விமான சேவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொதுப் போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டன. சேலம் காமலாபுரம் விமான நிலயத்தில் இருந்து சென்னை, திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்த ட்ரூஜெட் விமான சேவையும் நிறுத்தப்பட்டது.
 


இந்நிலையில், நாளை (மே 27) முதல் மீண்டும் சேலத்தில் இருந்து விமானப் போக்குவரத்தைத் தொடங்க இந்திய விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது. உள்நாட்டில் விமானப் போக்குவரத்துக்கு தமிழக அரசும் ஏற்பளித்துள்ளது. அதேநேரம், ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த விமான இயக்க நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


புதிய பயண அட்டவணைப்படி, சென்னையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் விமானம், சேலத்திற்கு 8.25 மணிக்கு வந்தடையும். பின்னர், சேலத்தில் இருந்து காலை 8.50 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு 9.50 மணிக்கு சென்றடையும். 
 


இதற்கு முன்பு, சென்னையில் காலை 9.50க்கு புறப்படும் விமானம் சேலத்திற்கு 10.40 மணிக்கு வந்தடையும். பின்னர், சேலத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டுச் சென்னைக்கு 11.50 மணிக்குச் சென்றடையும். தற்போது இதன் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சேலம் & சென்னை இடையே மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கப்படுவதையொட்டி தொழில் அதிபர்கள், வணிகர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்