சேலத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை பெய்த மழையால், மாநகரில் வெப்பம் தணிந்து இதமான சூழல் உருவாகி உள்ளது.
சேலத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4.20 மணியளவில் மழை பெய்தது.
சுமார் 40 நிமிடங்கள் வரை மழை கொட்டித் தீர்த்தது. சேலம் அம்மாபேட்டை, சின்ன கடைவீதி, அன்னதானபட்டி, நெத்திமேடு, அஸ்தம்பட்டி கன்னங்குறிச்சி, அழகாபுரம், சூரமங்கலம் கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் சேலம் அழகாபுரம் பகுதியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் பரவலாக இன்னும் மூன்று நாள்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்த நிலையில், சேலத்தில் பெய்த மழையால் மாநகரில் வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.