“ஏன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசியல்வாதியாக வேண்டும் எனும் கேள்வி வருகிறது. எனவே மக்கள் பாதை இளைஞர்கள் அத்தகைய முடிவை எடுப்பார்கள். அப்படி எடுக்கும்போது மக்கள் பாதை இளைஞர்கள் அந்த முடிவை அறிவிப்பார்கள்” என சகாயம் ஐ.ஏ.எஸ். அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், சமீபத்தில் தனது விருப்ப ஓய்வை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் அரசியலில் களமிறங்குவார், அவர் கட்சியில் இணைவார் என பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவர் மக்கள் பாதையில் இணைந்தார்.
திருவள்ளுவர் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தில் மக்கள் பாதை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எந்தவித நெருக்கடியும் இன்றி, தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலேயே விருப்ப ஓய்வு முடிவை எடுத்தேன். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் இருந்து ஏன் அரசியலை எதிர்பார்க்கிறீர்கள் எனும் கேள்வி எழுகிறது. ஏன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசியல்வாதியாக வேண்டும் எனும் கேள்வி வருகிறது. எனவே மக்கள் பாதை இளைஞர்கள் அத்தகைய முடிவை எடுப்பார்கள். அப்படி எடுக்கும்போது மக்கள் பாதை இளைஞர்கள் அந்த முடிவை அறிவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.