சபாிமலையில் நாளை நடை திறக்க இருக்கும் நிலையில் பக்தா்களுக்கு அடிப்டை வசதி கேட்டு எருமேலியில் பா.ஜ.க சாா்பில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடந்தது.
மண்டல மகர பூஜைக்காக நாளை மாலை சபாிமலையில் நடை திறக்கப்படுகிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேவசம் போா்டு செய்துள்ளது. இதில் சபாிமலைக்கு வரக்கூடிய பக்தா்கள் முதலில் எருமேலி சென்று அங்கு வாபா் பள்ளி்க்கு சென்ற பின் பேட்டைத்துள்ளி கொண்டு ஆற்றில் குளித்து விட்டு எருமேலி சாஸ்தாவை கும்பிடுவது வழக்கம் இதனால் சபாிமலையை போன்று எருமேலியிலும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்
இந்தநிலையில் நடை திறக்க ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் அங்கு வரும் பக்தா்களுக்கு குடி தண்ணீருக்கு எந்த விதமான வசதிகளையும் ஏற்பாடு செய்யவில்லையென்றும் தேவசம் போா்டு கடைகள் ஏலம் போகாமல் அப்படியே கிடப்பதாகவும் அந்த கடைகளை ஏலத்துக்கு விட தேவசம் போா்டு நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் மேலும் பக்தா்கள் நடந்து செல்லும் நடைபாதை உடைந்தும் குண்டும் குழியுமாக கிடக்கிறதாம்.
அதே போல் ஆற்றில் பக்தா்கள் குளிக்க கூடிய இடத்தில் மணல் மேடாக இருப்பதால் அதை அகற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதெல்லாம் வேண்டுமென்றே கேரளா அரசும் தேவசம் போா்டு செய்வதாக குற்றம் சாட்டி பா.ஜ.க சாா்பில் இன்று பத்தணம்திட்ட மாவட்ட தலைவா் ஹாி தலைமையில் பாஜக வினா் ஏராளமானோா் வாவா் பள்ளியில் இருந்து பேரணியாக சென்று எருமேலி சாஸ்தா கோவில் முன் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
பின்னா் கோவிலுக்குள் உள்ளிருக்க சென்ற பா.ஜ.க வினரை போலிசாா் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.