மாமல்லபுரத்தில் உள்ள புரதான சின்னங்களான அர்ஜுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம், பிடாரிரதம், புலிக்குகை மற்றும் மலைப்பகுதி குடவரை கோவில்களை கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
புரதான சின்னங்கள் அனைத்தும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அவைகளை சீண்டுவதால் கடிக்க வருகிறது. சிலரை கடித்த சம்பவங்களும் நடந்துள்ளது.
குளிர் பானங்களை பிடுங்கி சென்று குடித்தும், பிளாஸ்டிக் கவர் உணவுகளை தின்றும் குரங்குகள் இறந்துபோகிறது. இதை கட்டுப்படுத்துவது வனத்துறையினர் பொறுப்பு என்பதால் தொல்லியல்துறை காவலர்கள் கண்டு கொள்வதில்லை. வனத்துறையினரும் அரசு விதிமுறைப்படி வார இறுதியில்கூட வன ஆய்வுக்கு இப்பகுதிக்கு வருவதில்லை.
இப்படி இரு துறையினரின் அலட்சியத்தால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கும், இங்குள்ள குரங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிடாரிரதம் அருகே சுற்றுலா பயணிகளிடமிருந்து குளிர்பானத்தை பிடுங்கி குடிக்கும் குரங்கை படத்தில் கானலாம்.