வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்!
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் உறவினர்களின், நண்பர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் வீடுகள், நிறுவனங்கள் என பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா உள்ளிட்டோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல் சிறையில் உள்ள சசிகலாவுக்கு வருமானத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் தான் மெளன விரதம் இருப்பதால் வருமானவரித்துறை விசாரணைக்கு ஆஜராக இயலாது என்று சசிகலா கூறியுள்ளார். பிப்.10-ம் தேதி வரை விசாரணைக்கு ஆஜராக இயலாது என்றும் கடிதத்தில் சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.