Skip to main content

டைரி பக்கங்களில் குறிப்பிடப்பட்டு ள்ளவர்களை அமைச்சரவையிலிந்து நீக்குக: ஜி.ரா.

Published on 09/12/2017 | Edited on 09/12/2017

டைரி பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை
 அமைச்சரவையிலிந்து நீக்குக: ஜி.ராமகிருஷ்ணன்

சேகர் ரெட்டியின் டைரி விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:



’’டைம்ஸ் நவ் என்கிற தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேகர் ரெட்டியின் டைரியில் உள்ளவை என சில பக்கங்கங்களை வெளியிட்டுள்ளது. இந்த பக்கத்தில் உள்ள குறிப்புகளில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும், சில கட்சிகளின் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சேகர் ரெட்டியின் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அமைச்சர்களாக நீடிப்பதற்கு தார்மீக உரிமையற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். எனவே விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வெளிவந்துள்ள டைரி பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமெனவும், சேகர் ரெட்டி மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. ’’

சார்ந்த செய்திகள்