உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் வெளியிட்டது. டெல்லி உச்சநீதிமன்றத்தில் புதிய கட்டட திறப்பு விழாவில், முதற்கட்டமாக 113 வழக்குகளின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கடந்த 17/07/2019 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வெளியிட்டார். இதனைஇந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார். இது குறித்து குடியரசுத்தலைவர் பேசும் போது ஆங்கிலம் தெரியாத மக்களும் மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எளிதாக படிக்கலாம் என்றார்.

இந்திய மக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை எளிதாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும் வழங்கும் தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பது அனைவரும் அறிந்தது. இதற்கான வழிமுறைகள், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் எளிதாக அறியலாம். இதற்கான இணையதள முகவரி: https://www.sci.gov.in/judgments (OR) https://www.sci.gov.in/vernacular_judgment ஆகும். இந்த இணைய தளத்திற்கு சென்று, இணைய தளத்தின் மேலே "வெர்னாகுளர் " (VERNACULAR JUDGMENTS) என்ற ஆஃப்ஷன் (OPTION) இடம் பெற்றிருக்கும்.

அந்த ஆப்ஷனை கிளிக் செய்து "தமிழ்நாடு" (TAMIL NADU) என டைப் செய்து தேடல் (SEARCH) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியான நாள், எந்த மாநிலம், எந்த மொழி என்பது தொடர்பான முழுத்தகவல் "SCREEN"-ல் தெரியும். பின்பு தீர்ப்புகளை பதிவிறக்கம் செய்து எளிதாக படிக்கலாம். குறிப்பு: இந்த வழிமுறையை பயன்படுத்தி மேலே குறிப்பிட்டு 9 மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எளிதாகப் படிக்கலாம்.