Skip to main content

மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 4 லட்சம் பேர் நீக்கம்: ராஜேஷ் லக்கானி

Published on 22/10/2017 | Edited on 22/10/2017
மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 4 லட்சம் பேர் நீக்கம்: 
ராஜேஷ் லக்கானி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் பெயரும் இடம் பெற்றிருப்பதாகவும், அவற்றை நீக்கி வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. இந்திய தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்திருந்தது. அதன் அடிப்படையில் வீடு வீடாக சென்று ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இடம் பெயர்ந்து சென்றவர்கள், இறந்து போனவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி 50 சதவீதம் முடிந்துள்ளது.

இதுவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

சென்னையில் 11 ஆயிரத்து 609 இறந்த வாக்காளர்களின் பெயர்களும், 1 லட்சத்து 62 ஆயிரத்து 911 இடம் பெயர்ந்து சென்ற வாக்காளர்களின் பெயர்களும் கண்டறியப்பட்டன. இரண்டையும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 520 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் படுகிறார்கள். அதுபோல, திருவள்ளூர் மாவட்ட பட்டியலில் இருந்து 57 ஆயிரத்து 802 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் விழுப்புரம் 28 ஆயிரத்து 685, காஞ்சீபுரம் 24 ஆயிரத்து 116, சேலம் 20 ஆயிரத்து 481, விருதுநகர் 20 ஆயிரத்து 242, கன்னியாகுமரி 18 ஆயிரத்து 979, திருவாரூர் 10 ஆயிரத்து 790, நெல்லை 10 ஆயிரத்து 509, கடலூர் 10 ஆயிரத்து 107, ஈரோடு 8 ஆயிரத்து 786, சிவகங்கை 8 ஆயிரத்து 573, வேலூர் 8 ஆயிரத்து 417, தஞ்சாவூர் 7 ஆயிரத்து 850, தர்மபுரி 7 ஆயிரத்து 293, கிருஷ்ணகிரி 6 ஆயிரத்து 974, கோவை 6 ஆயிரத்து 170, திருப்பூர் 5 ஆயிரத்து 794, கரூர் 5 ஆயிரத்து 623, திருச்சி 5 ஆயிரத்து 293, திண்டுக்கல் 5 ஆயிரத்து 197, நீலகிரி 4 ஆயிரத்து 811, திருவண்ணாமலை 4 ஆயிரத்து 153, பெரம்பலூர் 3 ஆயிரத்து 663, மதுரை 3 ஆயிரத்து 305, நாமக்கல் 3 ஆயிரத்து 208, ராமநாதபுரம் 2 ஆயிரத்து 114, நாகப்பட்டினம் ஆயிரத்து 530, தூத்துக்குடி ஆயிரத்து 243, தேனி ஆயிரத்து 168, புதுக்கோட்டை 819, அரியலூர் 450 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 785 இறந்தவர்கள் பெயர்களும், 3 லட்சத்து 9 ஆயிரத்து 880 இடம் மாறியவர்கள் பெயர்களுமாக மொத்தம் 4 லட்சத்து 78 ஆயிரத்து 665 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்