தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தொடர்ந்து 5 நாட்கள் கனமழைக்கும், மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தமிழகத்திற்கு 7-ஆம் தேதி ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் வரும் 7-ஆம் தேதி முதல் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வரும் 5-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் புதிதாக உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து பின்னர் புயலாக மாறும். அதேபோல் வரும் 8-ஆம் தேதி மற்றோரு காற்றழுத்த தாழ்வுபகுதி தென்மேற்கு வாங்க கடலில் உருவாகும் எனவும் இதனால் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தொடர்ந்து 5 நாட்கள் கனமழைக்கும், மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பப்பதால் தமிழகத்திற்கு 7-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு வரும் 5 முதல் 8 தேதிவரை மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றிருக்கும் மீனவர்கள் உடனடியாக திரும்பவேண்டும் எனவும் அறிவுறித்தியுள்ளது வானிலை ஆய்வு மையம்.