தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேடை மாவட்டங்களில் இன்று (10.11.2021) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.