Skip to main content

பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம்

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம்

பத்திரபதிவு புதிய ஐ.ஜியாக குமரகுருபரன் நேற்று பொறுப்பேற்றுகொண்டார். பதிவு துறை ஐ.ஜியாக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய ஐ.ஜியாக குமரகுருபன் கடந்த 18 ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநராக பணியாற்றி வந்தார். 

இவர் உடனடியாக பொறுப்பு ஏற்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் குமரகுருபரன் சாந்தோமில் உள்ள பதிவுதுறை தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுகொண்டார். புதிய ஐ.ஜி பொறுப்பேற்பதற்கு முன்பு அவசர அவசரமாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் அளித்திருப்பது பதிவு துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்