Skip to main content

பழனி குடமுழுக்கில் தமிழில் மந்திரம் ஓத நடவடிக்கை- தமிழக அரசு பதில்

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

temple

 

பழனி முருகன் கோவிலில் நடைபெற இருக்கும் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் 'உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகன் கோவிலில் தமிழில் மந்திரம் ஓதுவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

 

அப்பொழுது அரசு தரப்பில், ‘முருகன் தமிழ்க் கடவுள் ஆவார். எனவே தமிழில் மந்திரம் ஓதுவதற்கு எந்த தனி நபரும் அரசுக்கு கற்றுத் தர வேண்டியது இல்லை. தமிழ்நாடு அரசு பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓத அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது’ எனத் தெரிவித்தது. இதனையடுத்து தமிழில் மந்திரம் ஓதுவதற்கான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்