கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளியில் நடைபெற்ற என்சிசி கேம்பில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய நபராக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல் சிவராமனின் தந்தையும் கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை குறித்த சம்பவத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது. 'நீதிமன்றம் தாமாக வந்து இதை விசாரிக்க வேண்டும். அப்பொழுது உண்மையான குற்றவாளிகள் குறித்து தெரிய ஏதுவாக இருக்கும்' என வழக்கறிஞர் சூரியபிரகாஷ் என்பவர் தலைமை மற்றும் பொறுப்பு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் ஆஜராகி முறையீட்டை வைத்திருந்தார்.
அதனைக் கேட்ட நீதிபதிகள், 'இது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு எடுப்பதை விட, யாரேனும் மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் உரிய முறையில் வழக்கை நீதிமன்றம் விசாரிக்கும்' என ஒப்புதல் அளித்து உத்தரவிட்டனர்.
Published on 23/08/2024 | Edited on 23/08/2024