Published on 01/10/2020 | Edited on 01/10/2020

அண்மையில் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் உயிரிழந்தவரின் உடல் வேறு ஒரு குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதே கள்ளக்குறிச்சியில் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த உடல்களை எலிகள் கடித்துக் குதறியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில், மின்சாரம் தாக்கி இறந்த கட்டிடத் தொழிலாளி ஆறுமுகத்தின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு வைத்திருந்த நிலையில், அவரது உடலை எலிகள் கடித்துக் குதறியதாகவும், இந்த அளவிற்கு அலட்சியமாக இருந்த மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் இறந்த கட்டிடத் தொழிலாளியின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.