கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும், தொற்று பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
கரோனாவால் இறந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் நடராஜன், ஜெயபால், பிரம்மரச்சர், சிவராமன், ராமகிருஷ்ணன், தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் சிதம்பரம் நகரில் 3-வது நாளாக 168 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெயசந்திரராஜா கூறினார்.