வேலூர் மாவட்டம், வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலை வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான லாரியை மடக்கினார்கள். லாரி சற்று தூரத்திலேயே நிறுத்த அதிலிருந்து ஒருவர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். லாரியை ஓட்டிவந்த ஒருவர் மற்றும் சிக்கியுள்ளார். வாணியம்பாடி நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் குமார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. லாரியை சோதனை செய்த போது அதில் 7 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது உள்ளது. இதுப்பற்றி அதிகாரிகள் கேட்ட போது, சிப்காட் வழியாக ஆந்திராவுக்கு இந்த அரிசியை கொண்டு செல்கிறோம் என லாரி ஓட்டுநர் வாக்குமூலம் தந்துள்ளார்.
லாரியையும், அரிசியையும் பறிமுதல் செய்ததுடன், லாரியையும் கைது செய்யப்பட்ட ஓட்டுநர் குமாரையும் காட்பாடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அரிசி கடத்தல் தொடர்பாக வழக்குபதிவு செய்து தப்பியோடி மற்றொரு நபர் யார் என்கிற தகவலை வாங்கி அவரை தேடத் தொடங்கியுள்ளன. தமிழகத்தின் வடமாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மூட்டை ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்படுகின்றன. லாரி, மினி லாரி, டாடா ஏசி வண்டி, அரசு பேருந்துகள், ரயில்கள் மூலமாக கடத்தப்படுகின்றன. எப்போதாவது தான் அதிகாரிகள் பிடிக்கின்றனர். மற்ற நேரங்களில் பிடிப்பதில்லை. இது பற்றி அறிந்த சிலர் கூறுகையில் இங்கிருந்து செல்லும் ரேஷன் அரிசி மூட்டைகள், ஒரு வாரத்தில் அது பாலிஸ் செய்யப்பட்டு 25 கிலோ டீலக்ஸ் அரிசி சிப்பமாக மீண்டும் தமிழகத்துக்கே வருகின்றது என்கின்றன.